சினிமா செய்திகள்
பெரியாரா? அண்ணாவா? விஜய் போஸ்டரால் கிளம்பிய சர்ச்சை!
நடிகர் விஜய்யின் 45வது பிறந்த நாள் நாளை மறுநாள் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் தளபதி ரசிகர்கள் போஸ்டர்களை தமிழகம் முழுவதும் ஒட்டத் துவங்கியுள்ளனர். மதுரையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அரசியலுக்கு வந்தால் நீங்கள் அண்ணா என்றும் அரசியலுக்கு வராவிட்டால் நீங்கள் தந்தை பெரியார் என்றும் அண்ணா மற்றும் பெரியாரின் புகைப்படங்களுக்கு பக்கத்தில் விஜய்யின் புகைப்படத்தை வைத்து போட்டோஷாப் செய்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் மாபெரும் தலைவர்களுக்கு நிகராக நடிகர் விஜய்யை வைத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அந்த பகுதியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
மேலும், தமிழகத்தை ஆள வா தலைவா என்ற போஸ்டர்களும் பல இடங்களில் ஒட்டப்பட்டு வருகின்றன.
மக்கள் இயக்கத்தை ஆரம்பித்த நடிகர் விஜய், இதுவரை அரசியலில் இறங்குவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த பிறந்த நாளில் ஆவது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று ஏதாவது அதிரடி அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.