இந்தியா
ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
![Rahul Vs Modi - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/06/Rahul-Vs-Modi.jpg)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுலுக்கு பிரதமர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், பிறந்த தினத்தை முன்னிட்டு ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் ஆசிர்வதிக்கட்டும் என கூறியுள்ளார்.
அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் அரசியல் நாகரீகம் கருதி பிரதமர் மோடி ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தேர்தலையொட்டி இருவரும் மாறி மாறி விமர்சித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.