சினிமா செய்திகள்
நெகட்டிவ் கதைக்கு நோ சொன்ன அஜித்!
தீனா, வில்லன், வரலாறு, பில்லா, மங்காத்தா என பல நெகட்டிவ் படங்களில் நடித்து பிளாக்பஸ்டர் ஆக்கியவர் நடிகர் அஜித். இதனை மனதில் வைத்துக் கொண்டு அஜித்திற்காக ஒரு நெகட்டிவ் கதையை இயக்குநர் எச். வினோத் ரெடி பண்ணி அவரிடம் கூறினாராம்.
ஆனால், அதற்கு நோ சொன்ன அஜித், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தில் அதிகரித்துள்ளது. நானே இளம் வயதில் பெண்களை துரத்தி துரத்தி ஓடி காதலிப்பது போன்ற படங்களில் நடித்து பெரும் தவறுகளை செய்துள்ளேன். எனக்கு ஒரு படம் பிடித்திருக்கிறது. அதனை நீங்கள் இயக்குங்கள் என கூறியுள்ளார்.
அந்த படம் தான் பிங்க். இந்த படத்தை பெண் இயக்குநர் ஒருவரை வைத்து ஏன் இயக்கக்கூடாது என எச்.வினோத் கேட்டதற்கு, இது பெண்களுக்கான படம் அல்ல, ஆண்களுக்கான படம் என்று அஜித் சொன்னதாக இயக்குநர் எச்.வினோத் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.