வணிகம்
இந்தியாவின் முதல் பயோபியூல் விமானத்தினை வெற்றிகரமாக சோதனை செய்த ஸ்பைஸ்ஜெட்!
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவில் பயோபியூல் விமானத்தினைத் திங்கட்கிழமை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
இந்தச் சோதனைக்காக ஸ்பைஸ்ஜெட்க்கு சொந்தமான விமான நிறுவனத்தின் பாம்பார்டியர் Q400 விமானத்தில் 75 சதவீதம் விமான எரிபொருள் மற்றும் 25 சதவீதம் பயோஜெட் பியூல் கலந்து பயன்படுத்தி டேராடூனில் இருந்து டெல்லி வரை பயணம் செய்து வெற்றி அடைந்துள்ளனர்.
சோதனை ஓட்டத்தின் போது விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை அடுத்து பயோபியூல் பயன்படுத்தி விமானத்தினை இயக்கிய பெருமை இந்தியாவிற்குச் சேரும்.
சோதனையில் வெற்றி அடைந்ததை அடுத்து விரைவில் இந்தப் பயோபியூல் விமான டெல்லி – டேராடூன் வரை தினசரி இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.