Connect with us

இந்தியா

தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயம்: புதிய கல்விக்கொள்கையால்  சர்ச்சை!

Published

on

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக பரிந்துரைத்துள்ளனர்.

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு இது தொடர்பான வரைவு கொள்கையை தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவிடம் கொடுத்திருந்தது. இந்த குழு தயாரித்த வரைவில் மும்மொழி கல்வி கொள்கையானது தாய் மொழியுடன் இணைப்பு மொழியான ஆங்கிலம் அவற்றுடன் வேறொரு மொழியான இந்தி இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதாவது, மூன்றாவது மொழி தேர்வு, மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக எதாவது ஒரு இந்திய மொழி இருக்க வேண்டும். இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க https://mhrd.gov.in என்ற இணையளத்தில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியியல் ஆய்வாளர்கள் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழி என்ன என்று அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளநிலையில் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழி இந்தியாக மட்டும்தான் இருக்கும் என இந்தியை திணிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!