சினிமா செய்திகள்
மே 30ம் தேதி கேம் ஓவர் டிரைலர் ரிலீஸ்!
மாயா படத்தை இயக்கிய இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள கேம் ஓவர் படத்தின் டிரைலர் வரும் மே 30ம் தேதி வெளியாகிறது.
தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் டிரைலரை மூன்று பிரபலங்கள் வெளியிடுகின்றனர்.
தமிழ் டிரைலரை நடிகர் தனுஷும், தெலுங்கு டிரைலரை நடிகர் ராணா டகுபதியும், இந்தி டிரைலரை நடிகை டாப்ஸியும் வெளியிட உள்ளதாக டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அறிவித்துள்ளார்.
வீடியோ கேம் விளையாட்டை மையமாக வைத்து ஹாரர் படமாக கேம் ஓவர் படம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் 14ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலர் வரும் மே 30ம் தேதி மதியம் 1 மணிக்கு ரிலீசாகின்றது.