சினிமா
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மஹத் (வீடியோ)
விஜய் டிவி நூறு நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் களத்தில் இருந்தனர். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் இதுவரை 7 பேர் வெளியேறியுள்ளனர். மீதமிருக்கும் 9 பேருடன் இந்த வாரம் நடிகை விஜயலட்சுமியும் சேர்ந்து கொண்டார்.
பிக்பாஸ் வீட்டின் நடவடிக்கைகளை வைத்து ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளரை மக்கள் வாக்களித்து வெளியேற்றி வருகின்றனர். அதன்படி, கடந்த வாரம் வைஷ்ணவி வீட்டைவிட்டு வெளியேறினார்.
இந்த வாரம் மஹத், மும்தாஜ், சென்ட்ராயன், பாலாஜி ஆகியோரின் பெயர் எடுத்துரைக்கப்பட்டது. இதில் பலரும் மஹத் தான் இந்த வாரம் வெளியேறுவார் என நினைக்கிறார்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது மஹத் தான் என நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில், மஹத் பிக்பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேறியுள்ளார். அதை உணர்த்தும்விதமாக இன்று நிகழ்ச்சிக்குழுவினர் புரமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் வெளியேறப்போகும் நபரின் பெயரை அறிவிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதிலிருந்து மஹத் ரெட் கார்டுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது தெரியவருகிறது. இதனால் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.