சினிமா செய்திகள்
குஷ்புவுக்கு தேர்தல் ஜூரமா?
நடிகையும் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான குஷ்பு, தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டு விட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் முடிவுகள் இன்று வருவதால், பல இடங்களுக்கு சென்று பேட்டி கொடுப்பதாக தான் அறிவித்திருந்த வாக்குறுதியை தன்னால் நிறைவேற்ற இயலவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நன்றாக எழுதாத குழந்தைகளுக்கு பரிட்சை ரிசல்ட் வந்தால் ஜூரம் வருவது போல உங்களுக்கும் தேர்தல் ஜூரம் வந்துவிட்டதா? என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே பாஜகவினர் லட்டுகளையும் கேக்குகளையும் அதிக அளவில் தயாரித்து வைத்து கொண்டாட்டங்களை நேற்றில் இருந்தே தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியினர் இவிஎம் மெஷின்களை குறைசொல்லத் தொடங்கி இருப்பது, தங்களுக்கு எதிராக தேர்தல் முடிவுகள் வரும் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்பது அவர்கள் செயல்களில் இருந்து தெள்ளத்தெளிவாக தெரிகிறது.