சினிமா செய்திகள்
பக்கா கூட்டணியில் உருவாகும் விக்ரம் 58!
சியான் விக்ரமின் 58வது பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படக்குழு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி வைரலானது.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என்ற இரு பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள விக்ரம் 58 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
வியாகாம் 18 நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் விக்ரமின் பல லுக் அடங்கிய ஸ்டோரிபோர்ட் மிக்ஸ்ட் கலெக்ஷன் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியாகி மிரட்டுகிறது.
இந்த படத்தின் ஷூட்டின் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பாலிவுட் இயக்குநர் மற்றும் இமைக்கா நொடிகள் படத்தின் வில்லனான அனுராக் கஷ்யப் மீண்டும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாயகி குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படவுள்ளது.