சினிமா செய்திகள்
ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த தலைவா விஜய் ஹேஷ்டேக்! ஏன் தெரியுமா?
நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வரும் ஜூன் மாதம் 22ம் தேதி வருகிறது. ஆனால், அதற்கு இன்னும் 50 நாட்களே உள்ளன என இப்போதே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 50 டேஸ் டு தளபதி விஜய் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதற்கும் ஒரு படி மேலே போய் சில ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து சுவர்களில் ஒட்டி, தங்களின் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் 1 லட்சம் ட்வீட்டுகளையும் தாண்டி விஜய் ரசிகர்கள் தலைவா விஜய் என்ற ஹேஷ் டேகை டிரெண்டாக்கி உள்ளனர்.
விஜய்யின் பிறந்த நாள் அன்று தளபதி 63 படத்தின் டைட்டில் அல்லது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகுமா? என ரசிகர்கள் ஐ எம் வெயிட்டிங் என காத்துக் கொண்டு இருக்கின்றனர். இயக்குநர் அட்லி, விஜய் ரசிகர்களை நிச்சயம் விஜய் பிறந்த நாளில் ஏமாற்ற மாட்டார் என்பது தெரிந்த விஷயம் தான். கடந்த ஆண்டு சர்கார் படத்தின் அப்டேட்கள் எப்படி ரசிகர்களை குதூகலப் படுத்தியதோ அதேபோல இந்த ஆண்டும் தீபாவளிக்கு வெளியாகும் தளபதி 63 படத்தின் முக்கிய அப்டேட் விஜய் பிறந்த நாள் ட்ரீட்டாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.