சினிமா செய்திகள்
படம் பேரு நீயா 2; ஆன மூணு பாம்பு?
ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள நீயா 2 படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
சுரேஷ் இயக்கத்தில் ஜெய், வரலஷ்மி சரத்குமார், கேத்ரின் தெரசா, ராய் லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் நீயா 2. விரைவில் வெளிவரவுள்ள இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கமல், ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான நீயா படத்திற்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றே தெரியவில்லை. நீயா 2 என பெயர் வைத்து விட்டு, கிளாமரா மூன்று நாயகிகளை போட்டு, மூன்று பேரையும் பகலில் பெண்களாகவும் இரவில் படு மொக்கை கிராபிக்ஸ் பாம்புகளாகவும் காட்டியுள்ளனர். சன் டிவி நந்தினி சீரியலே இதற்கு பரவாயில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஜெய்க்கு இந்த பாம்பு படம் கை கொடுக்குமா? பழிவாங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.