சினிமா செய்திகள்
உழைப்பாளர் தினத்தில் சியான் விக்ரம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!
![D5cvr3dU0AQ7tZ9 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/05/D5cvr3dU0AQ7tZ9.jpg)
சியான் விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் ஃபர்ஸ் சிங்கிளான கடாரம் கொண்டான் டைட்டில் சாங் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தற்போது ரிலீசாகியுள்ளது.
கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த கடாரம் கொண்டான் படம் இறுதிகட்டத்தில் உள்ளது.
சீயான் விக்ரம், அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஸ்ருதி ஹாசன் குரலில் அட்டகாசமாக உருவாகியுள்ள படத்தின் ஓபனிங் பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
என்ஜிகே டிரைலர் மற்றும் பாடல்கள் ட்ரெண்டாகியுள்ள நிலையில், கடாரம் கொண்டான் பட பாடலை ட்ரெண்டாக்கும் நோக்கில் சியான் ரசிகர்கள் சமூக வலை தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர்.