சினிமா செய்திகள்
காஞ்சனா ஹிந்தி ரீமேக்கில் திருநங்கையாக யார் நடிக்கிறார் தெரியுமா?
தமிழில் வெளியான காஞ்சனா படத்தில் திருநங்கையாக சரத்குமார் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இந்த படத்தை அக்ஷய்குமாரை வைத்து ஹிந்தியில் எடுத்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.
இந்த படத்தில் முக்கியமான வேடமான பிளாஷ்பேக்கில் வரும் திருநங்கை கதாபாத்திரத்தில் பாலிவுட் பிதாமகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் அமிதாப், தமிழ் காஞ்சனா படத்தை பார்க்க மறுத்து விட்டாராம். ஏனென்றால், சரத்குமார் சாயல் தனக்கு ஒட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தானாம்.
பாலிவுட்டின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் திருநங்கை வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது அருமையான விஷயமாக பார்க்கப்படுகிறது.
லக்ஷ்மி பாம் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.