வேலைவாய்ப்பு
தேசிய திறந்தவெளிப்பள்ளியில் வேலை!
தேசிய திறந்தவெளிப்பள்ளியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 86. இதற்குப் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்:86
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Director (Evaluation)
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.1,23,100 – 2,15,900
வேலை: Academic Officer
காலியிடங்கள்: 11
வயது: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.56,100 – 1,77,500
கல்வித்தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி திறன் அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்.
வேலை: EDP Supervisor
காலியிடங்கள்: 37
மாத சம்பளம்: ரூ.35,400 – 1,12,400
வயது: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை: Junior Assistant
காலியிடங்கள்: 37
மாத சம்பளம்: ரூ.19,900 – 63,200
வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 6 ஆயிரம் வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.nios.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.nios.ac.in/media/documents/vacancy/qualification_for_various_post.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.05.2019