சினிமா செய்திகள்
எமி ஜாக்சன் திருமண ஆல்பத்தில் அவர் குழந்தையும் இருக்கும்!
![amy jack - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/04/amy-jack.jpg)
நடிகை எமி ஜாக்சன் மற்றும் இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயிட்டோ காதலித்து வரும் செய்தி மட்டுமல்லாமல், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து எமி ஜாக்சன் கர்ப்பமாக ஆகியிருக்கும் செய்தி வரை கோலிவுட் முழுக்க பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கும் சூழலில், தனது திருமணம் எப்போது என்றும் எமி ஜாக்சன் அறிவித்து விட்டார்.
ஆம், அடுத்த ஆண்டு 2020ல் எமி ஜாக்சன் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும், கிரீஸ் நாட்டில் உள்ள மெக்கனஸ் ஐலேண்ட் ரெஸ்டாரண்டில் தான் தங்களின் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் எமி ஜாக்சன் அறிவித்துள்ளார். ஆனால், எந்த தேதி என்று மட்டும் அவர் இன்னும் தெரிவிக்கவில்லை.
கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன் ஆரோக்யமாக குழந்தையை பெற்று உடல்நிலை நன்றாக இருக்கும் நாளில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். குழந்தை பிறந்த பின்பு திருமணம் நடைபெறும் என்பதால், எமி ஜாக்சனின் திருமண ஆல்பத்தில் அவரது குழந்தை இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது தானே..