சினிமா செய்திகள்
பி.டி. உஷா பயோபிக்கில் கேத்ரீனா கைஃப்!
நடிகை கேத்ரீனா கைஃப் பி.டி. உஷா பயோபிக்கில் பி.டி. உஷா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய தடகள வீராங்கனை மற்றும் கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரியான பி.டி. உஷாவின் வாழ்க்கை வரலாறை கேரள இயக்குநரான ரேவதி வர்மா இயக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த படத்தில் முதலில் பிரியங்கா சோப்ராவை தேர்வு செய்திருந்த ரேவதி வர்மாவுக்கு, ஹாலிவுட்டில் பிசியாகி வரும் பிரியங்கா சோப்ராவின் கால்ஷீட் கிடைக்காததால், கேத்ரீனா கைஃபிடம் கதையைக் கூறியுள்ளார்.
கேத்ரீனாவுக்கு கதை மிகவும் பிடித்துப் போக, தான் நடித்துள்ள சூர்யவன்ஷி படம் முடிந்தவுடன் பி.டி. உஷா படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.