சினிமா செய்திகள்
தமிழ் ராக்கர்ஸ் அட்டகாசம்; 2 நாளைக்கு முன்னே அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் லீக் பண்ணிட்டாங்க!
புதுப்படங்களை அந்த படங்கள் ரிலீஸ் ஆகும் அன்றைய தினத்திலேயே இணையத்தில் வெளியிட்டு படத் தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக இருந்து வரும் தமிழ் ராக்கர்ஸ், தற்போது மார்வெல் இந்திய நிறுவனத்துக்கும் மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
நாளை ஏப்ரல் 26ம் தேதி தான் அவெஞ்சர்ஸ் படம் உலகம் முழுவதும் ரிலீசாகிறது. ஆனால், நேற்று இரவே தமிழ் ராக்கர்ஸில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் லீக் ஆகி படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மேலும், இந்தியாவில் பலரும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை டவுன்லோடு செய்து பார்த்து வருகின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
தானோஸை கூட அழிச்சிடலாம் போல, ஆனா தமிழ் ராக்கர்ஸா?