சினிமா செய்திகள்
எண்ட்கேமுக்கு எண்ட்கார்டு போடும் காஞ்சனா 3!
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 எதிர்மறை விமர்சனங்களை எல்லாம் தாண்டி தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்துக்கே எண்ட்கார்டு போடும் அளவுக்கு வந்துள்ளது.
கடந்த வாரம் வெளியான காஞ்சனா 3 திரையரங்குகளை திருவிழாக் கோலமாய் மாற்றி வசூலை குவித்து வருகிறது. தமிழ் மொழியை தாண்டி தெலுங்கிலும் பேய் ஹிட் அடித்து வருகிறது.
இந்நிலையில், நாளை உலகமெங்கும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் அதிக தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த வாரமும் காஞ்சனா 3 நல்ல கலெக்ஷனை அள்ளும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், குறைந்த எண்ணிக்கையிலான தியேட்டர்களே அவெஞ்சர்ஸ் எண்ட்கேமுக்கு கிடைத்துள்ளதாம்.
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் நினைத்த அளவுக்கு ஒட்டுமொத்த இந்திய திரையரங்குகளையும் ஆட்சி செய்யலாம் என்ற கனவில் பிளாக் ஹோலை போட்டுள்ளது காஞ்சனா 3.