சினிமா செய்திகள்
தர்பார் ஷூட்டிங்கில் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார்!
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வந்தது. நாயகி நயன்தாரா இல்லாத காட்சிகள் முதலில் படம் பிடிக்கப்பட்டு வந்த நிலையில், பிற பட வேலைகளை முடித்துக் கொடுத்து விட்டு, இன்று தர்பார் ஷூட்டிங்கில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கலந்து கொண்டார். இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் தனது ட்விட்டர் நிறுவனத்தில் அறிவித்துள்ளது.
இன்று தர்பார் ஷூட்டிங்கில் இணைந்துள்ள நயன்தாரா தொடர்ந்து 60 நாட்கள் கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம். இந்த படத்தில் நயன்தாரா படம் முழுக்க ரஜினிக்கு ஈக்வலான கதாபாத்திரத்தில் அதகளம் பண்ண உள்ளார்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படத்திலேயே அஜித்துக்கு நிகரான ரோலில் நடித்த நயன்தாரா அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் ரஜினிக்கு எதிராக தர்பார் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.