சினிமா செய்திகள்
சந்தானத்தின் சரவெடி காமெடியில் ஏ1 டீஸர் ரிலீஸ்!
சந்தானத்தின் ஏ1 டீஸர் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஜான்சன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
சந்தானத்துக்கு நாயகியாக புதுமுகம் தாரா அறிமுகமாகியுள்ளார். மொட்டை ராஜேந்திரன், மனோகர், சாமிநாதன் என சந்தானத்தின் காமெடி நண்பர்கள் இந்த படத்திலும் கை கோர்த்துள்ளனர்.
காதலுக்காக உயிரையும் கொடுப்பேன் என மொட்டை ராஜேந்திரன் கூறும் வசனத்திற்கு, வேணா.. வேணா.. பொணத்தலாம் தூக்கிட்டு சுத்த முடியாது என சந்தானம் கொடுக்கும் கவுண்டர் கலகலக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ள ஏ1 படம் விரைவில் வெளியாகவுள்ளது.