சினிமா செய்திகள்
சூர்யாவின் அடுத்த பட டைட்டில் ரிலீஸ்!
இறுதிசுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
’சூரரைப் போற்று’ எனும் வித்தியாசமான தமிழ் தலைப்புடன் சூர்யா – சுதா கொங்கரா படம் தயாராகி வருகிறது. அண்மையில் சென்னையில் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது.
இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சர்வம் தாள மயம் படத்தின் நாயகி அபர்ணா முரளி சூர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க உள்ளார்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இறுதிசுற்று படத்தை விட சூப்பராக வரப் போகிறது என்று பட பூஜையின் போது அளித்த பேட்டியில் இயக்குநர் சுதா கொங்கரா கூறினார்.