சினிமா செய்திகள்
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மேட்சை குடும்பத்துடன் கண்டு கழித்த நடிகர் தனுஷ்!
![D3w70OYWwAEesFW - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/04/D3w70OYWwAEesFW.jpg)
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதிய விறுவிறுப்பான போட்டி நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியைக் காண நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் தனது மகனுடன் சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு வந்து முழுப் போட்டியையும் கண்டு ரசித்தனர்.
நடிகர் தனுஷ் வந்து மேட்ச் பார்த்த செய்தியை அறிந்த ரசிகர்கள், அவர் அருகில் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுப்பதும், வீடியோ எடுப்பதும் என அலப்பறை செய்தனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன.