சினிமா செய்திகள்
சமந்தாவுக்கு நியூ யார்க் டைம்ஸ் பாராட்டு!
தேசிய விருதை வென்ற ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில், 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், வெளியாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.
விஜய்சேதுபதி ஷில்பா எனும் திருநங்கை வேடத்தில் மிரட்டியுள்ளார் என்றால், மறுபக்கத்தில், எந்தவொரு நடிகையும் நடிக்க சம்மதிக்காத ரோலில் ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
இவர்கள் தான் இப்படி என்றால், நடிகை சமந்தாவின் வேம்பு கேரக்டர் மற்றும் சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப் பட்டு வருகிறது.
நியூயார்க் டைம்ஸ் இதழ் படத்திற்கு பாசிட்டிவ் ஆன விமர்சனங்கள் அளித்துள்ளது. இயக்குநர் தியாகராஜா குமாரராஜா மற்றும் சமந்தாவின் நடிப்பை பெரிதும் பாராட்டியுள்ளது.