Connect with us

ஆரோக்கியம்

ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான மீன் குழம்பு – செம்ம சுவை!

Published

on

மீன் வாங்கினால் ஒருமுறை ஆந்திரா ஸ்டைலில் இப்டி செய்ங்க… ரெசிபி இதோ!

Andhra Fish Kulambu Recipe: இந்த ஆந்திரா ஸ்டைல் காரசாரமான மீன் குழம்பு சுவையில் அசத்தும். இது மிகவும் சுலபமாகவும், விரைவாகவும் தயாரிக்கப்படும் உணவாகும்.

மீன் குழம்பு என்றதும் நமக்கு எப்போதும் சமயத்தில் வரும் உணவு! மீன் பிரியர்கள் இதனை ருசிக்காமல் இருக்க முடியாது. இப்போது ஒரு சிறப்பு: உங்கள் வீட்டில் மீன் வாங்கினால் ஒருமுறை இந்த ஆந்திரா ஸ்டைலில் மீன் குழம்பை செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்கள் இந்த கார சுவையை நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆந்திரா ஸ்டைலில் மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

மீன் – 250 கிராம்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1/4 கப்
பூண்டு – 4 பல்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன்
கருப்பு மிளகு – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 3/4 கப்
பூண்டு – 1/4 கப்
தக்காளி – 1/2 கப்

செய்முறை:

  • முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் சீரகம், பெருஞ்சீரகம், மிளகு ஆகியவற்றை பொன்னிறமாக வதக்கவும்.
  • பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதை ஒரு தட்டில் எடுத்து ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • மீண்டும் கடாயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின்பு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • இப்போது அரைத்த மசாலாவை சேர்த்து, மீனையும் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • இறுதியாக கொத்தமல்லி இலை தூவி, சூப்பரான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பை பரிமாறுங்கள்.

 

author avatar
Poovizhi
ஆரோக்கியம்5 நிமிடங்கள் ago

கேரள ஸ்டைல் பச்சை மாங்காய் மீன் குழம்பு ரெசிபி!

ஆன்மீகம்13 நிமிடங்கள் ago

புரட்டாசி மாத பரிதாபங்கள் மற்றும் அதனை சரிசெய்வது எப்படி?

வேலைவாய்ப்பு27 நிமிடங்கள் ago

ரூ.34800/- சம்பளத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

ஜோதிடம்32 நிமிடங்கள் ago

500 ஆண்டுகளுக்குப் பிறகு 3 ராஜயோகங்கள்: தீபாவளிக்கு முன்னர் இந்த 4 ராசியினருக்கு அதிர்ஷ்ட பணமழை!

வேலைவாய்ப்பு36 நிமிடங்கள் ago

IRCTC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்45 நிமிடங்கள் ago

நவராத்திரி 2024: எப்போது தொடங்குகிறது? பூஜைக்கான சிறந்த நேரம் என்ன?

வேலைவாய்ப்பு51 நிமிடங்கள் ago

ரூ.1,40,000/- சம்பளத்தில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்55 நிமிடங்கள் ago

ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான மீன் குழம்பு – செம்ம சுவை!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் வேலைவாய்ப்பு!

செய்திகள்1 மணி நேரம் ago

வீடு தேடி வரும் தங்கம்! தமிழக அரசின் நலத்திட்டம் மக்களுக்கு நெருங்குகிறது!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா6 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்6 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை (26/09/2024)!

வணிகம்3 நாட்கள் ago

பங்குச் சந்தையில் 398% லாபம்: புதிய உச்சத்தை தொட்ட சுதர்சன் பார்மா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)