Connect with us

உலகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!

Published

on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வியாழக்கிழமை (செப்டம்பர் 12) காலமானார். அவருக்கு வயது 72 ஆகும். கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த யெச்சூரி, நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான புண்யாவதி, பிபிசி தெலுங்கு ஆசிரியர் ஜி.எஸ்.ராம்மோகனிடம், யெச்சூரி இன்று மதியம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார் எனத் தெரிவித்தார்.

செப்டம்பர் 10-ம் தேதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், யெச்சூரி கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், யெச்சூரியை தனது “நண்பர்” எனக் குறிப்பிடும் பதிவில், “இந்தியாவின் கருத்துரிமையின் பாதுகாவலர்” என்றும், “நாட்டை பற்றிய ஆழமான புரிதலுடையவர்” என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, யெச்சூரியின் மறைவு இந்திய அரசியலுக்கே ஒரு மிகப்பெரிய இழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.எஃப்.ஐ-யின் மரியாதை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ, “அன்புக்குரியவரும், எஸ்.எஃப்.ஐ-யின் முன்னாள் தலைவருமான யெச்சூரியின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, எங்கள் அமைப்பின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுகிறோம்” எனப் பதிவிட்டுள்ளது.

யெச்சூரியின் அரசியல் பயணம்

32 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவராக இருந்த சீதாராம் யெச்சூரி, 2015 ஆம் ஆண்டு முதல் அக்கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். 2005 முதல் 2015 வரை மாநிலங்களவையின் உறுப்பினராகவும் இருந்தார்.

 

author avatar
Poovizhi
வேலைவாய்ப்பு6 நிமிடங்கள் ago

AIIMS-ல் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்15 நிமிடங்கள் ago

செப்டம்பர் மாத சந்திர கிரகணம் – 5 ராசிகளுக்கு எச்சரிக்கை! கவனம் தேவை!

செய்திகள்21 நிமிடங்கள் ago

5 லட்சம் மதிப்பில் இலவச மருத்துவ காப்பீடு – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

ஜோதிடம்26 நிமிடங்கள் ago

சூரியன் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு மோசமான காலம் வரப்போகிறது!

வணிகம்35 நிமிடங்கள் ago

ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (12/09/2024)!

உலகம்43 நிமிடங்கள் ago

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!

பர்சனல் ஃபினான்ஸ்9 மணி நேரங்கள் ago

உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பு குறித்து இந்த 7 பேரிடமும் சொல்லவே கூடாது?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 12, 2024!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

2024 மகாளய அமாவாசை: சூரிய, சந்திர கிரகணத்தின் விளைவுகள் – இது மக்களுக்கு ஆபத்தா?

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சனியை நோக்கும் சூரியன் – அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யாவர்?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

யூரிக் ஆசிட் குறைக்க ஒரு பழம், ஒரு மசாலா: வெறும் 10 நாட்களில் பிரச்சனையை முற்றிலும் தீர்க்கலாம்!

வணிகம்4 நாட்கள் ago

HDFC வங்கி MCLR விகிதத்தை உயர்த்தியது! வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/09/2024)!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

இந்தியாவில் நீங்கள் வங்கிகளில் செய்யும் பிக்சட் டெபாசிட் (FD) முதலீடுகள் பாதுகாப்பனதா?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 9, 2024

வணிகம்3 நாட்கள் ago

Google Essentials: புதிய விண்டோஸ் பிசிக்கான கூகுள் பயன்பாடுகளை எளிதாக நிறுவலாம்!

செய்திகள்7 நாட்கள் ago

ஒலி மாசுக்கு எதிரான போர்: சென்னையில் புதிய நடவடிக்கைகள்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஐடிபிஐ வங்கியில் மேனேஜர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு – சம்பளம் மாதம் ரூ. 1,57,000 வரை!

ஆன்மீகம்7 நாட்கள் ago

வித்தியாசமான விநாயகர் சிலைகள்: ஒரு கலை நிகழ்வு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 6, 2024