சினிமா செய்திகள்
இயக்குநர் மகேந்திரன் அப்பலோவில் அனுமதி
பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் இயக்கிய உதிரிப்பூக்கள் திரைப்படம், தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே ஒரு பொக்கிஷமாக கருதப்படுகிறது. ரஜினியின் ஜானி, காளி, கைகொடுக்கும் கை உள்ளிட்ட படங்கள் மகேந்திரனின் சிறந்த படைப்புகளாக இன்றளவும் ரசிக்கப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பின், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் மாஸ் வில்லனாக மகேந்திரன் மீண்டும் சினிமாவில் நடிகராக அவதாரமெடுத்தார். தொடர்ந்து, நிமிர், சீதக்காதி, பேட்ட மற்றும் பூமராங் படத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், இயக்குநர் மகேந்திரன் சென்னை அப்பலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை சமூக வலை தளத்தில் பதிவிட்ட, அவரது மகன் ஜான் மகேந்திரன், தந்தைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என கோரியுள்ளார்.