சினிமா செய்திகள்
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்காக ஆந்தம் உருவாக்கும் இசைப்புயல்!
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம், அடுத்த மாதம் ஏப்ரல் 26ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், இந்த படத்தின் இந்திய புரொமோஷனுக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்காக தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் ஆந்தம் உருவாக்கி உள்ளார்.
இதுகுறித்து பேசிய ஏ.ஆர். ரஹ்மான், தனது குடும்பத்திலேயே பல மார்வெல் ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால், ஆந்தம் நன்றாக வரவேண்டும் என அழுத்தம் அதிகமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள ஆந்தம் வரும் ஏப்ரல் 1ம் தேதி வெளியாகிறது.
பாதி உலகத்தை அழித்த தானோஸை அழிக்க புதிய அவெஞ்சர்ஸ் டீம் போராடும் தீமில் இந்த ஆந்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.