Connect with us

தமிழ்நாடு

வெளியானது காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்: கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் யார் தெரியுமா?

Published

on

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் பட்டியல் நேற்று நள்ளிரவு டெல்லியில் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 9 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தில் இறங்கிவிட்டனர். ஆனால் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் குழப்பத்திலேயே இருந்து வந்தது. இது திமுக கூட்டணியில் உள்ளவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

இந்த சூழலில் வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து நாளை வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

ஆனால் நேற்று நள்ளிரவே வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிவிட்டது. முன்னதாக கன்னியாகுமரி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் தற்போது கன்னியாகுமரியில் கடந்தமுறை போட்டியிட்ட வசந்தகுமாரே போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிவகங்கை தொகுதியை தவிர மற்ற 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. சிவகங்கையில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக எச்.ராஜா களமிறங்கி உள்ளார். இவரை ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பர் எதிர்த்து போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள இந்த பட்டியலில் சிவகங்கை வேட்பாளர் அறிவிக்கப்படாததால் வேறு வேட்பாளர் பரிசீலனையில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் வேட்பாளர்கள்:

1. திருவள்ளுர் – திரு கே. ஜெயக்குமார்

2. கிருஷ்ணகிரி – டாக்டர் A. செல்லக்குமார்

3. ஆரணி – டாக்டர் MK விஷ்னுபிரசாத்

4. கரூர் – செல்வி எஸ். ஜோதிமணி

5. திருச்சிராப்பள்ளி – திரு சு. திருநாவுக்கரசர்

6. தேனி – திரு. EVKS இளங்கோவன்

7. விருதுநகர் – திரு மாணிக்கம் தாகூர்

8. கன்னியாகுமரி – திரு H. வசந்தகுமார்

9. புதுச்சேரி -திரு. வைத்தியலிங்கம்

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)