சினிமா செய்திகள்
மோகன் லால் கையால் சிறந்த நடிகை விருதை வாங்கிய த்ரிஷா!
21வது ஏசியாநெட் விருது விழா கேரளாவில் நடைபெற்றது. இந்த விருது விழாவில், சிறந்த நடிகைக்கான விருதினை நடிகை த்ரிஷாவுக்கு மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் வழங்கினார்.
கடந்த ஆண்டு த்ரிஷா நடிப்பில் வெளியான ஹே ஜூட் மற்றும் 96 படங்கள் த்ரிஷா ரசிகர்களை மட்டுமல்லாது சினிமா ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. திரைத்துறையில் 16 ஆண்டுகாலமாக நடித்து வரும் த்ரிஷா, இன்னமும் அதே இளமையுடன், திறமையான நடிப்பையும் வெளிக்காட்டி வருகிறார்.
இன்று நடைபெற்ற 21வது ஏசியாநெட் தொலைக்காட்சியின் சினிமா விருது விழாவில், சிறந்த நடிகைக்கான விருது த்ரிஷாவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை நடிகர் மோகன் லால் த்ரிஷாவுக்கு வழங்கினார்.
விருது விழா நிகழ்ச்சியில், மம்முட்டி, நிவின் பாலி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட மலையாள திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.