சினிமா செய்திகள்
விக்னேஷ் சிவன் இயக்க.. லைகா தயாரிக்க… பிரம்மாண்டமாக தயாராகிறது எஸ்கே17!
![sk17 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/03/sk17.jpg)
சிவகார்த்திகேயன் காட்டில் மழை என்று சொன்னால், அது நிச்சயம் மிகையல்ல. தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நாயகனான சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து 5 படங்களில் கமீட் ஆகியுள்ளார்.
சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படம் விரைவில் திரைக்கு வருகிறது. எஸ்.எம்.எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே படங்களை இயக்கிய எம். ராஜேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அடுத்ததாக, இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் படமும் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும், இரும்புத்திரை இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் கமீட் ஆகியுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்று லைகா நிறுவனம் தனது அடுத்த பிரமாண்ட தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பதை அறிவித்துள்ளது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பனான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். மேலும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
வரும் ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்கி, அடுத்த ஆண்டு 2020ல் படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.