சினிமா
தமிழுக்கு வரும் அமித் திரிவேதி
பாலிவுட் படவுலகில் அனைவராலும் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் அமித் திரிவேதி தமிழுக்கு வருகிறார்.
கங்கனா ரனாவத் நடித்து இந்தியில் சக்கைபோடு போட்ட ‘குயின்’ திரைப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். அதை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.
அதற்கு இசையமைப்பதற்காக ‘பாலிவுட்டின் ஏ.ஆர். ரஹ்மான்’ என்று ஊடகங்களால் கொண்டாடப்படும் அமித் திரிவேதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நேர்த்தியான இசைக் கோர்ப்பும் நுணுக்கமான உழைப்பும் கொண்ட அமித் திரிவேதிக்கு தமிழக ரசிகர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.
இவரை அனைவரும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இணையாகப் பேசினாலும் ‘அந்த மேதையுடன் என்னை ஒப்பிடாதீர்கள்; நான் போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது’ எனத்
தன்னடக்கத்துடன் கூறுகிறார்.