வணிகம்
புத்தாண்டு ஆரம்பமே மகிழ்ச்சி.. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!
சென்னை: புத்தாண்டின் முதல் நாளே வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 4.50 ரூபாய் குறைந்துள்ளது.
2024- ஆண்டு ஜனவரி மாதம், சென்னையில் 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1924.50 ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே சென்ற மாதம் 1929 ரூபாயாக இருந்தது. டெல்லியில் 1755 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 1869 ரூபாயாகவும் மும்பையில் 1708.50 ரூபாயாகவும் மும்பையில் 1708.50 ரூபாயாகவும் வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உள்ளது.
அதே நேரம் மானியம் இல்லா 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மற்றமில்லமல் சென்னையில் 918.50 ரூபாயாகவும், டெல்லியில் 903 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 929 ரூபாயாகவும், மும்பையில் 903 ரூபாயாகவும் உள்ளது.
(Source: iocl.com)