ஆரோக்கியம்
சுவையான இறால் குழம்பு செய்வது எப்படி?
![Shrimp curry - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/08/Shrimp-curry.jpg)
இறால் குழம்பு: (Shrimp curry)
தேவையானவை:
இறால் – அரை கிலோ
பெ.வெங்காயம் – 2
பூண்டு – 1
பச்சை மிளகாய் – 6
தேங்காய்ப் பால் – அரை கப்
கடுகு – 1டீ ஸ்பூன்(அரைக்கவும்)
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
கடுகு, எண்ணெய்- 2 டீஸ்பூன்
செய்முறை:
• இறாலைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பூண்டுவையும், ஒரு வெங்காயத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இன்னொரு வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். 3 மிளகாயை நறுக்கியும், மீதியை அரைத்தும் வைத்துக் கொள்ளவும்.
• இறாலை அகன்ற பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு கலந்து ஊற வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இறால் கலவையைக் கொட்டி ஐந்து நிமிடம் வதக்கி இறக்கவும்.
• பின்னர் வாணலியில் மீதமிருக்கும் எண்ணெய்யை ஊற்றி அது சூடானதும் நறுக்கிவைத்துள்ள மிளகாய், வெங்காயத்தைக் கொட்டி பொன்னிறமாக வதக்கவும். அதன் பிறகு விழுதாக அரைத்துள்ள வெங்காயம் பூண்டு, மிளகாயைப் போட்டுக் கிளறவும். அதனுடன் அரைத்த கடுகு, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.
• இறுதியில் தேங்காய்ப் பாலை ஊற்றிச் சிறு தீயில் கொதிக்கவிடவும். கொதிக்கத் தொடங்கியதும் இறாலைக் கொட்டி மூடிவைத்து 10 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். சுவையான இறால் குழம்பு ரெடி.