சினிமா செய்திகள்
பாலிவுட்டின் அடுத்த பிரம்மாண்டம் – கலன்க் டீஸர் ரிலீஸ்!
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வருண் தவான், ஆதித்யா ராய், மாதுரி தீக்ஷித், சோனாக்ஷி சின்ஹா, ஆலியாபாட், சஞ்சய் தத் என பாலிவுட் பிரபலங்கள் படையெடுப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான கலன்க் படத்தின் டீஸர் வெளியாகி ஒரே நாளில் 1.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
1945-ம் காலக்கட்டத்தில், இந்தியாவில் இருந்த ஒரு அரச குடும்பத்தின் கதையாக இந்த கலன்க் உருவாகியுள்ளது. இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார் அபிஷேக் வர்மா.
கரண் ஜோஹர், சாஜித் நாடியாவாலா, ஹீரோ யாஷ் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா என பல தயாரிப்பாளர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
அடுத்தமாதம் ஏப்ரல் 17ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் நேற்று மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் நடிகை ஆலியாபட்டை வருண் தவான் தூக்கிக் கொண்டு நடந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.