சினிமா
ஒரே காவிக்கொடி.. ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரண்ட ஒரு லட்சம் பக்தாஸ்!
![prabhas - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/06/prabhas.png)
பாகுபலி படத்திற்கு பிறகு ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் என ஒரே வலதுசாரி கொள்கை படங்களிலேயே நடித்து வருகிறார் நடிகர் பிரபாஸ். ஆதிபுருஷ் படத்தில் ராமராகவே நடித்துள்ள பிரபாஸின் இறுதி டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக திருப்பதிக்கு சென்று வெங்கடாசலபதியை வணங்கி வந்தார் பிரபாஸ். இந்நிலையில், தற்போது ஒரு லட்சம் ரசிக பக்தர்கள் சூழ எங்கும் காவிக்கொடி பறக்க ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
![prabass - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/06/prabass.png)
#image_title
பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ராமாயண கதையை ஆதிபுருஷ் எனும் டைட்டிலில் படமாக இயக்கி உள்ளனர்.
அனிமேஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் டீசர் வெளியான நிலையில், சிஜி சரியில்லை என்கிற குற்றச்சாட்டு ரசிகர்களால் வைக்கப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டது.
![adi - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/06/adi.png)
#image_title
அதன் காரணமாக அந்த படத்தையே ரிலீஸ் செய்யாமல் முற்றிலும் ரியாலிட்டியாக இருக்கும்படி லைவ் ஆக்ஷன் அம்சத்துடன் படத்தை மேலும், பல கோடி செலவு செய்து உருவாக்கி உள்ளனர்.
வரும் ஜூன் 16ம் தேதி உலகம் முழுவதும் ராம தரிசனம் கிடைக்கும் என ஜெய்ஸ்ரீராம் முழக்கம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் எங்கே பார்த்தாலும் காவிக் கொடி கணகச்சிதமாக பறக்கிறது.