Connect with us

கிரிக்கெட்

10வது முறையாக இறுதிப் போட்டியில் சென்னை: 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

Published

on

16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ். இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் தொடவக்க ஆட்டக்காரர்களான கான்வேயும், கெய்க்வாட்டும் சிறப்பான ஆடினர். அரைசதம் அடித்த கெய்க்வாட் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே மற்றும் ரகானே அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

சென்னை 172 ரன்கள்

கான்வே 40 ரன்களில் வெளியேற, தல தோனியும் 1 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக ஷமி மற்றும் மோகித் சர்மா தலா 2 விக்கெட்டுகளும், நலகண்டே, ரஷித் கான் மற்றும் நூர் அகமது தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சென்னை வெற்றி

173 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் சஹா 12 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்திக் பாண்ட்டியா 8 ரன்களும், தசுன் ஷனகா 17 ரன்களும் மற்றும் டேவிட் மில்லர் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 42 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் திவாட்டியா 3 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து விஜய் சங்கர் 14 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த நல்கண்டே வந்த வேகத்திலேயே ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

மறுமுனையில் தனி நபராக போராடிய ரஷித் கான் 30 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். குஜராத் அணி 20 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் தீக்சனா, தீபக் சாஹர், ஜடேஜா மற்றும் பதிரனா தலா 2 விக்கெட்டுகளும் தேஷ்பாண்டே 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 10வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

author avatar
seithichurul
பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

தினக் கூலிகளுக்கும் பென்ஷன்! பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம் பற்றித் தெரியுமா?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகும் புதன்! 5 ராசிகளுக்கு மகா பொற்காலம்! உங்களுக்கு எப்படி?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

பெற்றோர்களே, காலை 5 விஷயங்களை செய்து உங்கள் குழந்தைக்கு புத்திசாலித்தனம் அளியுங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்6 மணி நேரங்கள் ago

செப்டம்பர் மாத ராசி பலன் 2024: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள்!

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

அடுத்த 216 நாட்கள்: சனியின் பெயர்ச்சியால் செல்வம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

பணம் பெருகும் வழி: விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் விநாயகர் சிலை எப்படி வைக்க வேண்டும்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

புதுப்பிக்கும் சனி பகவான்: நவம்பரில் அதிர்ஷ்டம் மலரும் ராசிகள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

துலாம் ராசி இன்றைய பலன்: சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள், திறமைகள் வெளிப்படும்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

தனுசு ராசி இன்றைய பலன்: செல்வம் சேரும், பாசம் பொழியுங்கள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

குரு சந்திரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு கஜகேசரி யோகம் பேரதிர்ஷ்டம் தரவுள்ளது!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (25/08/2024)!

உலகம்7 நாட்கள் ago

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்சில் கைது: காரணம் என்ன தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

YouTube Premium கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலையில் மாற்றமில்லை!

வணிகம்3 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(28-08-2024)

தமிழ்நாடு7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 நாட்கள் ago

புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

குளிர், இருமலுக்கு சிறந்த மருந்து – காரசாரமான செட்டிநாடு கோழி ரசம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு-சனி இணைப்பு: ஜாக்பாட் ராசிகள் செழிப்பையும் மகிழ்ச்சியும் பெறுகிறார்கள்!