Connect with us

சினிமா

இந்த பொறந்தநாளைக்கும் பிரசாந்தின் ‘அந்தகன்’ வெளியாகலையே.. என்ன விஷயம்?

Published

on

டாப் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் பிரசாந்த் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா மற்றும் தபு நடிப்பில் வெளியான அந்தாதுன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

அந்த ஆண்டு வெளியான ராட்சசன் படத்தை விட அந்தாதுன் படத்துக்குத் தான் ஐஎம்டிபியில் முதலிடம் கிடைத்தது. அப்படி என்ன படம் அது என பார்த்த பிரசாந்தின் அப்பா தியாகராஜன் உடனடியாக தனது மகனுக்காக அந்த படத்தின் ரீமேக் உரிமையை 2019ல் கைப்பற்றினார்.

Andhagan Movie Still

ரீமேக் படங்களை கச்சிதமாக இயக்கிக் கொடுக்கும் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாவை வைத்து அந்த படத்தை இயக்கலாம் என நினைத்தார். ஆனால், அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே அய்யா சாமி ஆளைவிடுங்க என மோகன் ராஜா படத்தில் இருந்து விலகினார்.

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே. ஜே. பிரெட்ரிக்கை வைத்து அந்தகன் என்கிற டைட்டிலை எல்லாம் ரெடி செய்து விட்டு ஷூட்டிங் போன இடத்தில் என்ன பஞ்சாயத்து ஆனதோ தெரியவில்லை. அந்த இயக்குநரும் இதற்கு மேல் இந்த படத்தை நான் இயக்கவில்லை என எஸ்கேப் ஆக, என் மகனுக்காக அந்த படத்தை நானே இயக்குகிறேன். அந்த காலத்துல நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா என இந்த வயதிலும் மகனுக்காக இயக்குநர் அவதாரம் எடுத்தார் தியாகராஜன்.

Andhagan Movie Crew

பிரசாந்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்தை புக் செய்தும், வில்லியாக சிம்ரனை நடிக்க வைத்தும் அந்தகன் படத்தை இயக்கினார். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை. இந்த பிறந்தநாளில் கூட அந்தகன் படம் வெளியாகவில்லை. அந்தாதூன் மலையாள ரீமேக் பிரம்மம் எனும் பெயரில் பிருத்விராஜ், ராஷி கன்னா நடித்து வெளியாகி ஹிட் ஆனது.

தமிழில் இந்த ஆண்டுக்குள் அந்தகன் படம் வெளியாகும் என்கிற நம்பிக்கையுடன் ரசிகர்கள் நடிகர் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்3 மணி நேரங்கள் ago

ரிலையன்ஸ் ஜியோ 5 ஜி அப்கிரேட் பிளான் இப்போது ரூ.51 முதல்! முழு விவரம்!

பிற விளையாட்டுகள்5 மணி நேரங்கள் ago

ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்! கடைசி போட்டி எப்போது?

heart attack
ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

மாரடைப்பைத் தடுக்க மருத்துவர்கள் சொல்லும் 10 வழிகள்!

பல்சுவை5 மணி நேரங்கள் ago

தேசிய மன்னிப்பு நாள்: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் தாக்கம்

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

சிவப்பு இறைச்சி உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? ஆய்வு முடிவுகள்

வணிகம்8 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை மாற்றமில்லை (07/07/2024)!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

வீட்டிலிருந்தபடியே பெண்கள் கைநிறைய பணம் சம்பாதிக்க 5 வேலைகள்!

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஜூலை 7, 2024)

அழகு குறிப்பு17 மணி நேரங்கள் ago

முகச்சுருக்கத்தைத் தடுத்து இளமையைப் பெறுங்கள் – இயற்கை வழிமுறைகள்!

கிரிக்கெட்17 மணி நேரங்கள் ago

டி20 உலக சாம்பியன் இந்திய அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் கேப்ஜெமினி! 5000 ஐடி வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு சேர்க்கை 2024: முழு விவரம்

வணிகம்5 நாட்கள் ago

முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாயை அறிவிக்காத மத்திய அரசு! என்ன காரணம்?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 100+

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் சிசு இறப்பு விகிதம் 9 க்கும் கீழ் குறைத்து சாதனை!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் சொல்வது எப்படி? சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு: 8326 காலி பணியிடங்கள்!

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னையில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்: சோதனை தீவிரம்!

வணிகம்1 நாள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!06-07-2024