Connect with us

சினிமா செய்திகள்

அடுத்தடுத்த பட வெளியீடு மூலம் பதிலடி கொடுக்கும் சமந்தா!

Published

on

‘சாகுந்தலம்’, ‘குஷி’ எனத் தனது அடுத்தடுத்தப் படங்களின் வெளியீடு மூலம் சமந்தா பதிலடி கொடுத்து வருகிறார்.

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்திருக்கும் ‘குஷி’ படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜெயராம், சச்சின் கடேகர், முரளி சர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் தேவரகொண்டா- சமந்தா ஜோடியின் நட்சத்திர மதிப்பிற்கு ரசிகர்களிடையே வரவேற்பும், எதிர்பார்ப்பும் உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று பல மொழிகளில் வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக போஸ்டரில் விஜய் தேவரகொண்டாவும் நடிகை சமந்தாவும் காதலுடன் கைகோர்த்துக்கொண்டு தோன்றுவது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

மையோசிடிஸ் நோயால் சமந்தா இனி படங்களில் நடிக்க மாட்டார் என சொன்னவர்களுக்குப் பதிலடி தரும் விதமாக ‘சாகுந்தலம்’ பட புரோமோஷன், ‘குஷி’, ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கிறார் சமந்தா.

author avatar
seithichurul
ஆன்மீகம்7 நிமிடங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா1 மணி நேரம் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா2 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா