Connect with us

வணிகம்

19,000 பேரை வேலைநீக்கம் செய்யும் நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

Published

on

கடந்த சில மாதங்களாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்துவரும் நிலையில் தற்போது ஒரே நிறுவனம் 19000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர், பேஸ்புக் உள் பட பல நிறுவனங்கள் கடந்து சில மாதங்களாக வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் 2023 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து லட்சக்கணக்கானோர் தங்களது வேலையை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமேசான், கூகுள் உள்பட ஒரு சில நிறுவனங்கள் இரண்டாம் கட்ட வேலை நீக்க அதிகரிக்க அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது Accenture Plc என்ற நிறுவனம் சுமார் 19000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாகவும் வருடாந்திர வருவாய் மற்றும் லாபம் குறைந்து உள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

#image_title

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 18 மாதங்களில் ஏறக்குறைய 19000 ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவார்கள் என்றும் இது குறித்த நெறிப்படுத்தல் மற்றும் செயல்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் வேலைநீக்கம் குறித்த தகவல் அந்தந்த ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. Accenture Plc நிறுவனம் 19000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போகிறது என்ற தகவல் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு நிறுவனம் மிகப்பெரிய வேலை நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. இந்த நிலையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட பல ஊழியர்கள் தற்போது தொழிலதிபராக மாறி உள்ளது ஒரு வகையில் பாசிட்டிவாக பார்க்கப்பட்டாலும் இன்னும் பல ஊழியர்கள் வேலை கிடைக்காமல் திண்டாட்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
இந்தியா1 மணி நேரம் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா2 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா