தமிழ்நாடு

ஆல்பாஸ் என்பதால் பள்ளிக்கு வரவேண்டாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Published

on

9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும் அந்த வகுப்புகளில் படித்து வரும் மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி ஆல்பாஸ் என்றும் சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் அறிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்பதால் நாளை முதல் அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கும்போது அதாவது வரும் ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கும் போது அந்த மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்

இருப்பினும் திட்டமிட்டபடி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்பதால் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version