தமிழ்நாடு

தமிழகத்தில் 100ஐ நெருங்குகிறது ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை: லாக்டவுன் உறுதியா?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரே ஒரு ஒமிக்ரான் பாதித்த நோயாளி மட்டுமே இருந்த நிலையில் திடீரென 33 பேர்கள் ஒரே நாளில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97 பேர்கள் என்று வெளி வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று அளித்த பேட்டியின்போது தமிழ்நாடு முழுவதும் 97 பேருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி உள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கி உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version