வீடியோ

’கரை வந்த பிறகே.. பிடிக்குது கடலை’ பாடல் வீடியோ ரிலீஸ்!

Published

on

நடிகர் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் முதல் பாடலான ’கரை வந்த பிறகே பிடிக்குது கடலை’ என்ற பாடலின் முழு வீடியோ ரிலீசாகியுள்ளது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார், முதல் காதலையும், முதல் காதலை பிரிந்த காதலர்கள் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் அந்த ஒரு நாளையும், மிகவும் அழகிய மெல்லுணர்வோடு கலந்து, ஒரு தூய்மையான காதல் காவியமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில், டிராவல் போட்டோகிராபராக நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். படத்தின் ஓபனிங்கே இந்த அழகிய பாடலுடன் தான் தொடங்கும். நாமும், இப்படி ஒரு வாழ்க்கையை வாழமாட்டோமா என ஏங்க வைக்கும் அளவுக்கு படம்பிடிக்கப்பட்ட இந்த பாடலின் வீடியோவை திங்க் மியூசிக் தற்போது, தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Trending

Exit mobile version