தமிழ்நாடு

சென்னையில் திடீரென மூடப்பட்ட 925 கடைகள்: என்ன காரணம்?

Published

on

சென்னையில் திடீரென 925 கடைகள் மூடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இருந்தாலும் இன்னும் முழுமையாக கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கவில்லை என்பதால் ஒரு சில கட்டுப்பாடுகள் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 925 கடைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத இந்த 925 கடைகள் மூடப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சில கடைகளில் விசாரணை நடந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்னை முழுவ்தும் 2047 நிறுவனம் 40 ஆயிரத்து 755 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் கடந்த நாட்களில் அரசின் விதிமுறைகளை மீறியதால் சென்னையில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் தவறை உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவே அபராதம் வசூலிக்கப்படுவதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version