தமிழ்நாடு

கூடுதலாக 90 மின்சார ரயில்கள்-தெற்கு ரயில்வே துறை அறிவிப்பு.

Published

on

சென்னை பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று கூடுதலாக 90 மின்சார ரயிலை இயக்க போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் முற்றிலும் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்து. ஊரடங்கு தளர்வுக்கு பின் சுமார் 120 மின்சார ரயில்கள் முதற்கட்டமாக இயக்கப்பட்டு அது பின்னர் 150 தாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 90 ரயில்களை கூடுதலாக இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பின்படி,

சென்னையில் நாளொன்றுக்கு 500 க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகருக்குள் இருக்கும் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் நேர விரயத்தை தவிர்ப்பதற்காக சென்னை மக்கள் பெரும் பாலும் இந்த ரயில் சேவைகளை பயன்படுகிறார்கள்.

தற்போது அந்த எண்ணிக்கையை 500-ஆக உயர்த்தும் பொருட்டு இன்று முதல் மேலும் கூடுதலாக 90 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ரயில்கள் அறிவிப்பால் சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version