தமிழ்நாடு

தமிழகத்தில் 90% திரையரங்குகள் திறக்கவில்லை: காரணம் என்ன?

Published

on

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் 90 சதவீத திரையரங்குகள் திறக்கவில்லை என்று தகவல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளை திறக்கலாம் என்றும், தினசரி 3 காட்சிகள் திரையிடலாம் என்றும், 50 சதவீத பார்வையாளர்களுடன் கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து திரையரங்குகள் செயல்படலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனை அடுத்து இன்று காலை பேட்டியளித்த தமிழக திரையரங்கு உரிமைகள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் தமிழகத்தில் 40 சதவீத திரையரங்குகள் திறக்கப்பட இருப்பதாகவும், சினிமா கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என்றும் முந்தைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் கொரோனா வைரஸ் வழிமுறைகளை கடைப்பிடித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகம் முழுவதும் 10 சதவீத திரையரங்குகள் மட்டுமே திறந்து இருப்பதாகவும், 90 சதவீத திரையரங்குகள் திறக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு காரணமாக திரையரங்குகளில் திரையிடப்படும் வகையில் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் ஏற்கனவே வெளியான அல்லது சூப்பர் ஹிட்டான படங்கள் மட்டுமே திரையிடப்பட வேண்டிய இருப்பதால் ரசிகர்கள் கூட்டம் அதிகம் வராது என்ற காரணத்தினால் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் ஒரு சில திரையரங்குகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை மூன்று அல்லது நான்கு புதிய திரைப்படங்கள் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே வெள்ளி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version