இந்தியா

தடுப்பூசி போட்டுக்கொண்ட 89 பேர் பலி: மத்திய அமைச்சர் தகவல்!

Published

on

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்ட நிலையில் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து 50 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 45 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 89 பேர் பலியாகியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில் ’மார்ச் 16 ஆம் தேதி வரை தடுப்பூசி போட்டுக் கொண்ட 89 பேர் பலியாகியுள்ளதாகவும் ஆனால் இதில் ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் பலியானார் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பதை கண்காணிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தடுப்பூசி போட்டதால் தான் மரணம் ஏற்பட்டதா? என்பதை ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அது செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

Trending

Exit mobile version