இந்தியா

அதிக சம்பளத்தில் வேலை வேண்டாம்.. ராஜினாமா செய்து குறைந்த சம்பளத்திற்கு செல்லும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

Published

on

பொதுவாக வேலையில் சேரும் ஊழியர்கள் அதிக சம்பளத்தை தான் எதிர் நோக்குவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தியர்கள் பெரும்பாலும் அதிக சம்பளம் உள்ள வேலை வேண்டாம் என்றும் குறைந்த சம்பளம் உள்ள வேலை போதும் என்ற மனப்பான்மையுடன் இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த கருத்து கணிப்பு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மனித மூலதன மேலாண்மை தேர்வுகள் அமைப்பு இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் ஊழியர்களின் மனநிலை குறித்த கருத்துக்கணிப்பு எடுத்தது. அதில் இந்தியாவில் சுமார் 88 சதவீதம் பணியாளர்கள் குறைந்த ஊதியம் இருந்தாலும் போதும் மன நிம்மதியான வேலை வேண்டும் என்றும் அதிக சம்பளம் இருக்கும் வேலையில் மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதே கருத்தை அமெரிக்காவில் 70% ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பணியாளர்கள் தங்கள் வேலையை தொடங்கும் போது எப்போதுமே சிக்கல் இருப்பதாகவும் அதனால் வேலை முடியும் போது மிகவும் சோர்வாக இருப்பதாகவும் கூறுகின்றனர். அதிக சம்பளம் உள்ள வேலையில் அதிக இலக்கு இருக்கும் என்றும் அதனால் தங்களது மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாகவும் குறைந்த சம்பளம் உள்ள வேளையில் எந்த விதமான இலக்கும் இல்லை என்பதால் மன நிம்மதியுடன் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்றும் வீட்டுக்கு சென்ற பிறகு எந்த விதமான அழுத்தமும் தங்களுக்கு இல்லை என்றும் கருத்துக்கணிப்பில் பலர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மேனேஜர் போன்ற பணிகளில் தங்கள் கீழ் பணி செய்யும் ஊழியர்களை அவர்கள் வேலை வாங்க வேண்டும் என்பது ஒரு மிகப்பெரிய அழுத்தமான பணி என்றும் அந்த பணியை தங்களுக்கு மிகவும் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மேல் அதிகாரிகளுக்கு தாங்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை இருப்பதால் பெரும்பாலும் மேனேஜர் போன்ற வேலைகளை இந்தியர்கள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காலத்திற்கு பிறகு பெரும்பாலான ஊழியர்கள் மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் என்றும் சம்பளம் குறைவாக இருந்தாலும் மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதை புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்பட 10 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதாகவும் மொத்தத்தில் இந்த கருத்துக்கணிப்பில் மனநலம், மன நிம்மதி, அவ்வப்போது விடுமுறை ஆகியவைகளையே விரும்புகின்றார்கள் என்றும் இந்தியர்கள் சுமார் 88 சதவீதம் இதனையே விரும்புகிறார்கள் என்றும் இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version