இந்தியா

இளைஞருக்காக படுக்கையை தியாகம் செய்த 85 வயது பெரியர் உயிரிழப்பு!

Published

on

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 வயது நபரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன்னுடைய படுக்கையை தியாகம் செய்த 88 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 85 வயது தபோல்கர் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக நாக்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அதே மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 வயது நபர் ஒருவர் தனது மனைவியுடன் வந்திருந்தார்.

அந்த மருத்துவமனையில் படுக்கைகளில் இல்லாததால் 40 வயது நபரை அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. இதை பற்றி கேள்விப்பட்ட 85 வயது நபர் டாக்டரிடம் எனக்கு 85 வயது ஆகிவிட்டது வாழ்க்கையும் முடிந்து விட்டது அந்த பெண்ணின் கணவரை காப்பாற்றுவது தான் முக்கியம். எனவே என்னை டிஸ்சார்ஜ் செய்து என் படுக்கையை அந்த பெண்ணின் கணவருக்கு வழங்குங்கள் என்று கூறினார்.

உங்கள் நிலை ஆபத்தாக இருக்கிறது என்றும் வீட்டுக்கு செல்வது நல்லதல்ல என்று டாக்டர் கூறியும் அதை பொருட்படுத்தாமல் தனது படுக்கையை அந்த பெண்ணின் கணவருக்கு தியாகம் விட்டு வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற மூன்று நாட்களில் தபோல்கர் இறந்துவிட்டார். அதே நேரத்தில் அவர் செய்த உதவியால் அந்த பெண்ணின் கணவர் பிழைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version