சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை ஒரே திரையரங்கில் 84 காட்சிகள்!

Published

on

சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களுள் ஒன்றான மாயாஜால் தியேட்டரில் நேர்கொண்ட பார்வை முதல் நாளில் 84 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாம்.

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நாளை உலகமெங்கும் வெளியாக உள்ள படம் தான் நேர்கொண்ட பார்வை இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று வெளியாகி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தியேட்டர்களின் எண்ணிக்கை சரசரவென உயர்ந்தது.

இந்நிலையில் சென்னையில் உள்ள மாயாஜால் தியேட்டரில் உள்ள 16 ஸ்கிரீனிலும் 6 காட்சிகள் வீதத்தில் 84 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக மாயாஜால் சினிமா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், படத்தின் புக்கிங் அனைத்து தியேட்டர்களிலும் ஞாயிறு வரை கிடுகிடுவென புக் ஆகி வருவதால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும், சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில தியேட்டர்களில் நள்ளிரவு 1 மணிக்கு முதல் ஷோ போடப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version