தமிழ்நாடு

தமிழகத்திலும் சென்னையிலும் எகிறும் கொரோனா வைரஸ் பாதிப்பு: இன்று மட்டும் எவ்வளவு?

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை செய்திருந்த நிலையில் தமிழகத்தில் இன்று 800ஐ தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அது மட்டுமின்றி சென்னையில் வழக்கத்தைவிட அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

Us corona death toll overtakes world war 2தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 836

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 860,562

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 317

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 4

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12551

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 553

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 842,862

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 64,645

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 180,30,760

Trending

Exit mobile version